search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிக்கெட் விற்பனை"

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல். போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. #IPl #IPLSeason2019

    சென்னை:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

    12-வது ஐ.பி.எல். போட்டி வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 5-ந்தேதி வரை இரண்டு வார காலத்துக்கான அட்டவணை மட்டும் வெளியிடப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் ஐ.பி.எல். முழு அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும்.

    டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஆண்டு ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது. இதனால் 12-வது ஐ.பி.எல். போட்டியின் தொடக்க ஆட்டம் சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது.

    இரவு 8 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

    இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது.

    சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கவுண்டரில் காலை 11.30 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்கியது. டிக்கெட் விற்பனை மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.

    டிக்கெட் வாங்குவதற்காக நள்ளிரவில் இருந்தே ரசிகர்கள் ஸ்டேடியம் முன்பு திரண்டு இருந்தனர். ரசிகர்கள் நீண்ட கியூவில் நின்று குறைந்தபட்ச டிக்கெட்டின் விலையான ரூ.1,300யை வாங்கி சென்றனர். ஒருவருக்கு 2 டிக்கெட்டுகளே கொடுக்கப்பட்டது.

    இதேபோல ரூ.2,500, ரூ.5,000, ரூ.6,500 விலைகளிலும் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன.

    நாளை முதல் காலை 10 மணிக்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும். டிக்கெட் விற்பனையையொட்டி சேப்பாக்கம் ஸ்டேடியம் முன்பு போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர்.

    இதேபோல புக்மை ஷோ (in.bookmysho.com) என்ற இணைய தளத்திலும் டிக்கெட்டுகள் விற்பனை நடைபெறும். குறைந்த விலையான ரூ.1,300க்கான டிக்கெட்டுகள் கவுண்டரில் மட்டுமே கிடைக்கும்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கத்தில் மோதும் எஞ்சிய ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

    சேப்பாக்கம் மைதானத்தில் 2-வது ஆட்டம் 31-ந்தேதி நடக்கிறது. இதில் ராஜஸ்தான் ராயல்சுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதுகிறது. #IPl #IPLSeason2019

    கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்காக அன்பளிப்பாக வழங்கப்பட்ட டிக்கெட்டுகளை விற்பனை செய்வதாக 8 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். #INDvWI #WIvIND #chennaichepaukstadium
    சென்னை:

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான கடைசி 20 ஒவர் போட்டி நேற்று நடைபெற்றது.

    இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த பெங்களூரைச் சேர்ந்த அப்துல் ரகுமான் நேற்று முன்தினம் பிடிபட்டார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் போக்குவரத்து போலீஸ்காரர் முத்துவே இந்த டிக்கெட்டுகளை விற்பனை செய்ய சொன்னார் என்று கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதனை தொடர்ந்து போலீஸ்காரர் முத்து மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.

    இதற்கிடையே கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்காக அன்பளிப்பாக வழங்கப்பட்ட டிக்கெட்டுகளையும் சிலர் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீசார் மைதானம் அருகே ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அன்பளிப்பு டிக்கெட்டுகளை வாலிபர்கள் சிலர் விற்பனை செய்து கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். இது போன்று 8 பேர் பிடிபட்டனர்.

    இவர்கள் அனைவரும் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றியவர்கள். தங்களுக்கு கிடைத்த அன்பளிப்பு டிக்கெட்டுகளையே இவர்கள் விற்பனை செய்ததது தெரிய வந்துள்ளது. #INDvWI #WIvIND #chennaichepaukstadium
    தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி வருகிற 11-ம் தேதி ஆரம்பிக்க உள்ள நிலையில் அதற்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது. #TNPL2018 #NammaOoruNammaGethu
    நெல்லை:

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் தமிழ்நாடு பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 11-ந் தேதி முதல் ஆகஸ்டு 12-ந் தேதி வரை சென்னை, நெல்லை, நத்தம் (திண்டுக்கல்) ஆகிய மூன்று இடங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி டி.என்.பி.எல். போட்டியின் மீடியா மேலாளர் டாக்டர் பாபா, கிரிக்கெட் வீரர்கள் அஸ்வின், இந்த்ராஜித், சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை செயல் அதிகாரி விசுவநாதன் ஆகியோர் நேற்று நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வருகிற 11-ந்தேதி தொடங்கும் 3-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் மொத்தம் 32 ஆட்டங்கள் நடக்க உள்ளன. மாலை 3.15 மணி, இரவு 7.15 மணி ஆகிய நேரங்களில் நடைபெறும் போட்டிகள் அனைத்தையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. நெல்லையில் முதல் சீசனில் 8 ஆட்டங்களும், 2-வது சீசனில் 13 போட்டிகளும் நடந்தன. தற்போது 14 போட்டிகள் நடத்தப்படுகிறது.

    நெல்லையில் 11-ந் தேதி நடைபெறும் தொடக்க விழாவில் 8 அணிகளின் கேப்டன்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். மேலும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். இந்த போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. டிக்கெட் கட்டணம் கடந்த ஆண்டை போன்றே ரூ.50 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. போட்டியில் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.1 கோடியும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.60 லட்சமும் பரிசாக வழங்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #TNPL2018 #NammaOoruNammaGethu
    ×